சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ. 4,460ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,480-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.80 குறைந்து ரூ. 36,400-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,964 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ. 4,974ஆக இருந்தது. இன்று 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இது நேற்று மாலை ரூ. 39,792-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.80 குறைந்து ரூ. 39,712-க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 66.60க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 0.40 காசுகள் குறைந்து ரூ. 66.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது.
Must Read : ‘முதலமைச்சர் நிச்சயமாக கேள்வி கேட்பார்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில், இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold rate