ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம்!

Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம்!

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக்கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து 4,697 ரூபாயாகவும், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 37,576 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

  தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 ரூபாய் அதிகரித்து, ரூ.4,697ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.136 ஏற்றம் கண்டு, ரூ.37,576ஆக அதிகரித்துள்ளது.

  Read More: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

  வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி கிராம் ரூ.61.50ஆகவும், கிலோ ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது

  Published by:Srilekha A
  First published:

  Tags: Gold Price, Gold rate