சீர்காழியில் கல்யாண ரங்கநாதர் கோவில் தோட்டத்தில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

சீர்காழி அருகே திருநகரி கல்யாண ரங்கநாதர் கோவில் தோட்டத்தில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சீர்காழியில் கல்யாண ரங்கநாதர் கோவில் தோட்டத்தில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
திருநகரி கல்யாண ரங்கநாதர் கோவில் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை.
  • Share this:
சீர்காழி அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாதர் ஆலயத்தில் நந்தவனம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கோவில் சுற்றுச்சுவர் அருகே மண்ணில் புதைந்திருந்த 1 அடி உயரமும் 1.750 கி.கிராம் எடையுடன் கூடிய ஐம்பொன்னால் ஆன ஸ்ரீதேவி சிலையை சீரமைத்தவர்கள் கண்டெடுத்தனர். அதனை  மீட்டு கோவில் ஊழியர்கள் பாதுகாப்புடன் அலுவலகத்தில் வைத்தனர்.

Also see:தகவல் அறிந்து வந்த இந்து சமய அறநிலைதுறை உதவி ஆணையர் இளையராஜா, சிலை மீட்கபட்ட இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் வேறு ஏதாவது சிலைகள் கிடைக்கிறதா எனவும் மண்ணைத் தோண்டி சோதனை செய்யபட்டது. அதன் பின்பு ஐம்பொன் சிலையை உதவி ஆணையர் சீர்காழி வட்டாட்சியர் ரமா தேவியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கபட்டு ஆய்வு மேற்கொள்ளபட்ட பின்னரே சிலையின் காலம் மற்றும் மதிப்பு குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading