`கீழடியில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளது’: தமிழக அரசு

news18
Updated: October 11, 2018, 9:57 PM IST
`கீழடியில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளது’: தமிழக அரசு
கோப்புப்படம்.
news18
Updated: October 11, 2018, 9:57 PM IST
கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அவர்களது நாகரிகத்தையும் அறிவதற்கு கீழடியில் தொடர்ந்து அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வழக்கறிஞர் கனிமொழி மதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மேற்கொண்ட 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகளில் இதுவரை 7000-ம் மேற்பட்ட உலோகம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதில் கலைநயத்துடன் கூடிய தங்க ஆபரணம் கிடைத்துள்ளதாகவும், இதன் வயதை கணக்கிடுவதற்காக கலிஃபோர்னியாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.

தமிழக அரசு சார்பில் கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கும் விண்ணத்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியத்தையும் அறிவது அவசியம் எனவும், தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கருத்து கூறிய நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொல்லியல் துறை பதிலதிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை  31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறி்த்த அறிக்கை தயார் செய்யும் பணியில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை சேர்க்க கோரிய மனுவும் விசாரணைக்கு வந்தது.

அதுதொடர்பாக மத்திய தொல்லியல்  ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...