Home /News /tamil-nadu /

நகை கடன் தள்ளுபடி.. பயனாளர்கள் இன்று முதல் நகைகளை பெறலாம்..

நகை கடன் தள்ளுபடி.. பயனாளர்கள் இன்று முதல் நகைகளை பெறலாம்..

நகை கடன் தள்ளுபடி

நகை கடன் தள்ளுபடி

Gold Loan : நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, விவரங்கள் தொகுக்கப்பட்டு கணினி மூலம் ஒரு மாதம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அதன்படி, புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்ததில் அதிமுக ஆட்சியின்போது நகைக்கடன்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு விதி மீறல்கள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நகைக்கடன் வாங்கியிருப்பது, முன்னதாக பயிர்க்கடன் பெற்றவர்கள், வெவ்வேறு வங்கிகளில் 5 சவரனுக்கும் மேல் நகைக்கடன் பெற்றவர்கள் உள்ளிட்டோர், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி கிடைத்தது. 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற 22.52 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், நகைக்கடன் பெற்ற தகுதியான, தகுதி அற்றவர்களின் பட்டியலை தயாரிக்க தமிழக அரசு குழு ஒன்றையும் அமைத்தது.

    Read More : 12 ஆண்டுகள். 91 நாடுகள் பயணம்.. சொகுசு வாகனத்தில் மாமல்லபுரம் வந்த ஜெர்மன் தம்பதி...

    அந்த குழு மாவட்டம் வாரியாக நகைக்கடன் பெற தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்து, அந்தந்த கூட்டுறவு வேளாண் சங்கங்களுக்கு அனுப்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    Must Read : மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் சுயசரிதை: ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தால் இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold loan, MK Stalin

    அடுத்த செய்தி