• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு.. கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் 

சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு.. கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் 

ஓடும் ரயிலில் செயின் பறிப்பு

ஓடும் ரயிலில் செயின் பறிப்பு

ஓடும் ரயிலில் பெண் அணிந்திருந்த 11.5 சவரன் தங்க நகைகளை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய இருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

  • Share this:
    சென்னை திருவொற்றியூரில் ஓடும் ரயிலில் திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள் பெண்ணின் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெற்றியூர் கிராம பகுதியை சேர்ந்தவர் விஜயலக்ஷ்மி. இவர் தனது மூன்று குழந்தைகளுடன் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அவரின் வீட்டு அருகில் உள்ள தினேஷ் என்கிற மண்டை தினேஷ் ,விஜயலக்ஷ்மியை பின் தொடர்ந்து வந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயில் நிலைய நடைமேடையில் ஓடும் ரயிலில் அப்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 11.5 சவரன் தங்க நகைகளை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

    Also Read: ஃபேஸ்புக்கில் தொடர்ந்த நட்பு.. கல்லூரி தோழியை ஏமாற்றி பணம் கறந்த இளைஞர் - புழல் சிறையில் அடைப்பு

    விஜயலட்சுமி கூச்சலிடவே  அருகில் இருந்தவர்கள் மின்சார ரயிலை நிறுத்தி இறங்கி ஓடி பொதுமக்களே மடக்கி  பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்சம்பவ இடத்திற்கு வந்த கொருக்குப்பேட்டை இருப்பு பாதை போலீசார் நகையை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைப்பு திருவெற்றியூர் கிராம பகுதியை சேர்ந்த தினேஷ் என்கிற மண்டைய தினேஷ்(19), மற்றும் கிளி என்கிற தினேஷ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த தர்மஅடி கொடுத்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: அசோக் குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: