Home /News /tamil-nadu /

விமான நிலையத்தில் ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

விமான நிலையத்தில் ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

கடத்தி வரப்பட்ட தங்க கட்டி

கடத்தி வரப்பட்ட தங்க கட்டி

  • News18
  • Last Updated :
    வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் ஒரு கிலோ தங்க கட்டிகள் இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் உள்ளாடை மற்றும் டிவிடி பிளேயரில் மறைத்து எடுத்து வந்த ஒன்றே கால் கிலோ தங்க கட்டிகள் சிக்கின.இதையடுத்து அவர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி


    இதே போல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்துள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai Airport, Foreign Currency, Gold Biscuit, Singapore

    அடுத்த செய்தி