ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சத்தியம்தான் முக்கியம்.. பிறழ்சாட்சி சுவாதிக்கு நீதிமன்றம் அறிவுரை

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சத்தியம்தான் முக்கியம்.. பிறழ்சாட்சி சுவாதிக்கு நீதிமன்றம் அறிவுரை

கோகுல்ராஜ்

கோகுல்ராஜ்

நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய். சாதி,  மதங்களை கடந்து சொல்ல வேண்டும் . மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, சத்தியம், உண்மைதான் முக்கியம் என்றும் சாதி, மதத்தை கடந்து சொல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது, நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுவாதி இன்று பலத்த பாதுகாப்புடன் ஆஜரானார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரமேஷ்,  ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போதுஅர்த்தநாரீஸ்வரர்  கோவிலில் உள்ள CCTV காட்சிகளை நீதிமன்றத்தில் உள்ள தொலைக்காட்சி யில் காண்பித்து,  பல்வேறு கட்டங்களாக CCTV காட்சியில் உள்ள அந்த நபர்,  பெண் யாரென்று தெரியுமா?  என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு,  யார் என்று தெரியவில்லை.  அடையாளம் காண முடியவில்லை என சுவாதி பதில் கூறினார்.

கோகுல் ராஜ் கொலை வழக்கில், நடந்த உண்மையை நீங்கள் கூறினால் நல்லது, இல்லை என்றால், நாங்கள் கேள்வி கேட்டு கொண்டே இருப்போம் என்ற தெரிவித்த நீதிபதிகள் சில ஆவணங்களை சுவாதியிடம் காண்பித்து கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிபதிகள் இந்த பிரதான சாட்சியான சுவாதியின்  போக்கு சரியானதல்ல என தெரிவித்தனர்.

நீதிபதிகள்: *கீழமை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன் சாட்சி அளித்தீர்களா?

சுவாதி- ஆம்.

நீதிபதிகள்: அங்கு உள்ள கையெழுத்து உங்களது தானா?

சுவாதி: ஆம்.

நீதிபதிகள்: அப்பவும் உங்களிடம் சத்தியபிரமாணம் வாங்கினார்களா?

மாஜிஸ்திரேட்டு உங்களிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தா?  கேள்விக்கு பதில் கூறுங்கள் இல்லையேல் விட்டு விடுங்கள் என கேட்டார்களா? மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்   கோகுல்ராஜை தெரியும் என கூறிவிட்டு, தற்போது உயர்நீதிமன்றத்தில்   ஒரு தகவல் கூறுகிறீர்கள்.? இங்கு ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள். சத்தியபிரமாணம் எடுத்து ஏன் பொய் சொல்கிறீர்கள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அதன் பின், ஒரு ஆடியோவை  நீதிபதிகள்  சாட்சியிடம் போட்டு காண்பித்தனர். அந்த ஆடியோவில், கோகுல்ராஜும் தானும் , கோவிலில் இருந்த போது,  யுவராஜ் வந்து நீங்கள் காதலிக்கிறீர்களா?  என எங்களிடம் கேட்டதாக, ஒரு பெண்  கோகுல்ராஜின் உறவினரிடம் பேசிய உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.  இதை தொடர்ந்து;

நீதிபதிகள்: ஆடியோவில் நீங்கள் பேசினீர்களா? உங்கள் குரலா? இல்லையா?

சுவாதி: இல்லை.

நீதிபதிகள்: உங்கள் குரலையும்,  ஆடியோவில் உள்ள குரலையும்  எடுத்து குரல் பலிசோதனைக்கு அனுப்ப உள்ளோம். கார்த்திக் ராஜா வை உங்களுக்கு தெரியுமா?

சுவாதி: தெரியும்.

நீதிபதிகள்: கோகுல்ராஜ் காணமல் போனது குறித்து கார்த்திக் ராஜா உங்களிடம் பேசினாரா?

சுவாதி: ஞாபகம் இல்லை.

நீதிபதிகள்: உங்களை பொறுத்தவரை 23ம் தேதி நடந்தது வரை உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

சுவாதி: எங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால்,  இந்த வழக்கை விசாரித்த CBCID போலீசார் கூறியதை நான் செய்தேன். எங்களுக்கு எதுவும் தெரியாது .

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் கேள்வி.. தமிழ்நாடு சட்டத்துறை விளக்கம்..

நீதிபதிகள்:  இந்த வழக்கில் சித்ரா, நடேசன்,  கலை செல்வன் ஆகியோரை உங்களுக்கு தெரியுமா?

சுவாதி:   தெரியாது.

நீதிபதிகள்: காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் போது நீங்கள் இருந்தீர்களா?

சுவாதி:  இல்லை.

நீதிபதிகள்: சாட்சியான நீங்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுகிறீர்கள். நீங்கள் உண்மையை மறைப்பது உறுதியானால், உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை வழக்கு பதிவு செய்யப்படும். அடுத்த வாரம் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம்.உண்மையை பேசுங்கள் என கூறி வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்

விசாரணை மீண்டும் தொடங்கியபோது, நீதிபதிகள் சுவாதியிடம்  நீங்கள் கூறுவதில் உறுதியாக உள்ளனர்.நீங்கள் பொய் சொன்னால் சிறைக்கு செல்ல நேரிடும். வழக்கு மிகவும் முக்கியமானது.   நீதிமன்றத்திற்கு,  நீதிபதிகளுக்கு ஒன்றுமே தெரியாது என நினைக்கிறீர்களா?கடைசியில் சத்தியம் ஜெயிக்கும்.உங்களை  பார்த்தே உங்களுக்கு தெரியாது என்றால் என்ன செய்வது?

நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய். சாதி,  மதங்களை கடந்து சொல்ல வேண்டும் . மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். உண்மை பேசுங்கள்.உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என கூறி  வருகிற புதன் கிழமை வழக்கு ஒத்தி வைத்தனர்.

அதுவரை சாட்சி மற்றும் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினர்.

Published by:Murugesh M
First published:

Tags: Court, Gokul raj murder, Madurai High Court