ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனைக்கு எதிர்த்து மேல்முறையீடு.. சிபிசிஐடிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனைக்கு எதிர்த்து மேல்முறையீடு.. சிபிசிஐடிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கோகுல்ராஜ் ஆணவக் கொலை

கோகுல்ராஜ் ஆணவக் கொலை

Gokulraj Murder Case: கோகுல் ராஜ் கொலை வழக்கில் 106 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடர்பாக 550 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ்,  அருண் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் CBCID க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை  சோ்ந்த பொறியியல் மாணவா் கோகுல்ராஜ்  கொலை வழக்கில், சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனா் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள்  தண்டனைகள் விதித்து மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் வன்கொடுமை சிறப்பு  நீதிமன்றம் கடந்த 08/03/22 அன்று தீர்ப்பு வழங்கியது. முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  மற்ற குற்றவாளிகளில் அருண்,  குமாா்,  சதீஷ்குமாா்,  ரகு,  ரஞ்சித்,  செல்வராஜ் ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டது.

Also Read:  காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

மேலும், சந்திரசேகரன் , பிரபு மற்றும் கிரிதா் ஆகிய 3 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை  வழங்கப்பட்டது. இதில் பிரபு மற்றும் கிரிதா் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையோடு மேலும்  5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவா்கள் அனைவரும் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கோலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட , சேலம் சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ், ,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு/23/06/2015 ல் கோகுல் ராஜ் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை நாமக்கல் CBCID போலீசார் விசாரணை நடத்தினர்.  இந்த வழக்கு முதலில் நாமக்கல் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, முன் விசாரணைக்கு வந்தது. அதன் பிறகு, மதுரை மாவட்ட 3 வது கூடுதல் அமர்வு வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Also Read: கருங்கல்லால் அதிர்ந்த குருவாயூர் ரயில்.. பதறிய ஓட்டுநர் - வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை

சிறப்பு நீதி மன்றத்தில் விசாரணை நடை பெற்று 08/03/22 அன்று எனக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.மதுரைமாவட்ட கூடுதல் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தால் எனக்கு  வழங்கப்பட்ட 3 ஆயுள்  தண்டனையை எதிர்த்து  நான் மேல்முறையீட்டு  மனு தாக்கல் செய்துள்ளேன் . மேல் முறையீட்டு மனு தாக்கல்  செய்வதற்கான போதிய முகாந்திரம் உள்ளது. இந்த வழக்கில் 106 சாட்சிகளிடம் விசாரணை நடை பெற்றது. வழக்கு தொடர்பாக  550 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.  இதில் அனைத்தும் பிறழ் சாட்சிகளாக மாறின. உறுதி செய்யப்படவில்லை . கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு  எதிரானது.  மற்றும் சமத்துவம் , மனசாட்சிக்கு எதிரானது.

முழு வழக்கும் சூழ்நிலை சாட்சியத்தின் அடிப்படையில் உள்ளது. தண்டனை வழங்குவதற்கு முன், சந்தேகம் இன்றி  குற்றம் நிருபிக்கப்படவில்லை .4  சூழ்நிலை சாட்சிகளை கொண்டு  ஆதரங்களாக  (evidence) தயார் செய்து தண்டனை வழங்கி உள்ளனர்.

1) உள்நோக்கம்,

2) கடைசியாகப் பார்த்த கோட்பாடு   (CCTV காட்சிகள்),

3) குற்றஞ்சாட்டப்பட்ட கூடுதல் நீதித்துறை வாக்குமூலம் ((யுவராஜ் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி))

4) தலைமறைவாக இருந்தது. இவற்றை ஆதரமாக கொண்டு தண்டனை வழங்கி உள்ளனர்.

சந்தேகம் இன்றி குற்றம் நிரூபிக்கப்படவில்லை. முழு வழக்கும் பிரதானமாக 4  சூழ்நிலை சாட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட வில்லை. முக்கியமாக, கோகுல் ராஜை  கடத்தி சென்றனர்  என கூறிய,  உடன் இருந்த அந்த. பெண் (சுவாதி) நேரில் பார்த்த சாட்சி,   பிறழ் சாட்சியாக மாறினார். பிரதான சாட்சியமாக உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்  கோவில் CCTV  காட்சிகளில் , கோகுல்ராஜ்  மற்றும் அந்த பெண் (PW4  அந்த பெண் சுவாதி) கோவிலில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளிவருகின்றனர்.  கடத்தப்பட்டதாகக் கூறப்படும்  குற்றசாட்டுக்கு  எந்தவிதமான காட்சிகளும் இல்லை.

Also Read: காவிரி பிரச்சனையில் தோற்றால் வருங்கால சமுதாயம் காரி உமிழும்.. உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் துரைமுருகன்

சில வினாடிகளுக்குப் பிறகு  அந்த பெண்  ( PW4 சுவாதி)   மற்றும் தற்போது  குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேரை தவிர , மற்றவர்கள் மற்றும்   கோகுல்ராஜ் ஆகியோர்   கோவிலுக்குள் மீண்டும் ஒருவர் பின் ஒருவராக செல்கின்றனர். இந்த CCTV காட்சிகளை  தவிர, கோகுல்ராஜை  கொலை செய்தது  மற்றும் ரயில் பாதையில் கோகுல்ராஜ் உடலை கிடத்தியதற்கான எந்த சாட்சியும்,  ஆதாரமும் இல்லை.பிரதான ஆதாரமாக உள்ள  அர்த்தநாரீஸ்வரர் கோவில்  CCTV காட்சி முற்றிலும் பொய்யானது .

மேலும் இந்த வழக்கு விசாரணையில் முக்கியமாக ஊடக அழுத்தம் (MEDIA TRIAL) வழக்கில் ஆதிக்கம் செலுத்தியது. CCTV  காட்சிகள் மற்றும் பிற மின்னணு ஆவணங்கள் தொடர்பான நிபுணர்களின் சான்றுகளை  கொண்டு வழக்கில் தண்டனை வழங்க வழிவகுத்து உள்ளது. அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட  சாட்சியங்களில்  கூட, பெரும்பாலான ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  சட்டபடி , எந்த ஆதாரப்பூர்வமான முகாந்திரம் இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் நபர். மற்றும் BCS பட்டதாரி மற்றும் தொழில் செய்து வந்தேன்.

சட்டத்தின் பிடியில் இருந்து நான் தலைமறைவாக மாட்டேன் .நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு  கட்டுப்படுவேன்.கடந்த 25.08.2016 ம் ஆண்டு முதல் தற்போது வரை  நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்து வருகிறேன். எனவே சேலம் ஓமலூர் கல்லூரி  08/03/2022 அன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் எனக்கு வழங்கிய 3 ஆயுள் தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடவேண்டும் ,மேல் முறையீட்டு வழக்கு முடிவடையும் வரை எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இதே போல் , தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி,  இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அருண், குமாா், சதீஷ்குமாா், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய 6 பேரும்,  மேலும் தலா ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட , சந்திரசேகரன் ,பிரபு மற்றும் கிரிதா் ஆகிய3 பேரும்  தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், மேல் முறையீட்டு வழக்கு முடிவடையும் வரை ஜாமின் வழங்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன்,  சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட CBCID ASP,  CBCID இன்ஸ்பெக்டர், கோகுல்ராஜின் தாய் சித்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.  இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 11 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: CBCID, Gokul raj, Gokul raj murder, Police, Yuvaraj