• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Video | காவலரை ஒருமையில் திட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Video | காவலரை ஒருமையில் திட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் ஆட்சியர்

இதுகுறித்து தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், சீருடை அணிந்த காவலரை காஞ்சிபுரம் ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
காவல் ஆய்வாளரை பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக இருந்த காவல் ஆய்வாளர், விஐபி வரிசையில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, காவலரை ஒருமையில் திட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சைக்குள்ளானது.



இதுகுறித்து தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், சீருடை அணிந்த காவலரை காஞ்சிபுரம் ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆட்சியர் பொன்னையா மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Also Watch: யூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்த வாலிபர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: