முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கும்பகோணம் டூ நியூயார்க்: 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு!

கும்பகோணம் டூ நியூயார்க்: 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு!

பார்வதி தேவி சிலை

பார்வதி தேவி சிலை

மீட்கப்பட்ட பார்வதி தேவி சிலையின் உயரம் 52 சென்டிமீட்டர் மற்றும் இந்திய ரூபாயில் இந்த சிலையின் மதிப்பு, 1.6 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டது.

நூற்றாண்டு கால சிலை கண்டுபிடிப்பு, தொலைந்த சிலை மீட்பு என்று அவ்வப்போது செய்திகள் வெளிவரும். ஒரு சிலை தொலைந்து போனதா அல்லது திருடப்பட்டதா, அது எந்த காலத்தை சேர்ந்த சிலை, அதன் மதிப்பு எவ்வளவு என்ற விவரம் எல்லாம் தெரிய வரும் போது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கும். மேலும், தொல்பொருள் ஆய்வாளர்களும் அவ்வப்போது நிலத்தடியில் இருந்து சிலைகளை மீட்கும் போதும் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளி வரும். அதேபோல கும்பகோணத்தில் தொலைந்து போனதாக கருதப்பட்ட பார்வதி தேவியின் சிலை 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

கும்பகோணத்தில் இருந்து நியூயார்க் என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு டிரேசிங் நெட்வொர்க்காகக் காணப்படுகிறது. இந்த சிலை எங்கிருந்தது, எவ்வாறு தொலைந்தது இதன் மதிப்பு மற்றும் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். கும்பகோணத்தில் தண்டன்தோட்டம் என்ற ஊரில் இருக்கும் நந்தபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இருந்து பார்வதி தேவி சிலை ஒன்று காணாமல் போனது.

தமிழ்நாட்டில் கோவில்களில் நகரமாக, நவக்கிரக தலமாக கூறப்படும் கும்பகோணத்தில் இருந்த பார்வதி தேவியின் சிலை நியூயார்க் நகரத்தில் போன்ஹாம்ஸ் ஏல வீட்டில் கண்டறியப்பட்டது என்று சிலை கடத்தல் பிரிவு, CID துறை கடந்த திங்களன்று செய்தி வெளியிட்டது. தொலைந்து போன இந்த சிலை சோழர் காலத்தைச் சேர்ந்தது என்றும், இது ஒரு செம்பு சிலை என்றும் மதிப்பீடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த சிலையின் உயரம் 52 சென்டிமீட்டர் மற்றும் இந்திய ரூபாயில் இந்த சிலையின் மதிப்பு, 1.6 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டது.

Also Read : சுதந்திர போராட்டத்தின்போது கல்லூரி மாணவியாக ரகசிய வானொலி... யார் இந்த உஷா மேத்தா

1971 ஆம் ஆண்டு சிலை தொலைந்து போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக விசாரணை நிலுவையில் இருந்ததை அடுத்து, பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு கே. வாசு என்பவர் கோயில் சிலை கடத்தல் பிரிவில் புகார் அளித்து, FIR பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில்தான் இந்த சிலை காணாமல் போனது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டது. சிலை கடத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம் சித்ரா அவர்கள் இந்த விசாரணையை மேற்கொண்டு, சோழர் காலத்தைச் சேர்ந்த பார்வதி தேவி சிலைகள் எந்தெந்த அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல வீடுகளில் இருந்தன, காட்சிக்கு வைக்கப்பட்டன என்ற விசாரணையைத் தொடங்கினார்.

நீண்ட விசாரணைக்கு பிறகு, அமெரிக்காவில், நியூயார்க் நகரில் உள்ள போன்ஹாம்ஸ் ஆக்ஷன் ஹவுசில் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆலயங்களில் பார்வதி தேவி அல்லது சிவபெருமானின் மனைவியான உமா தேவி என்று வழிபடப்படும் அம்மன், நிற்கும் நிலையில்தான் சிலைகள் காணப்படுகின்றன. இந்த சிலையில் அம்மன் தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிந்து காணப்படுகின்றன. சிலையை மீட்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான எல்லா ஆவணங்களும் தயாராக உள்ளதாக சிலை பிரவு CID, காவல்துறை DGP, ஜெயந்தி முரளி கூறியுள்ளார்.

First published:

Tags: Kumbakonam, NewYork