• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'சின்மயி வடிவில் ஆண்டாள் கவிஞருக்கு பாடம் புகட்டுகிறார்': தமிழிசை அடடே கருத்து

'சின்மயி வடிவில் ஆண்டாள் கவிஞருக்கு பாடம் புகட்டுகிறார்': தமிழிசை அடடே கருத்து

 பாஜக மாநிலத் தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக மாநிலத் தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆண்டாளை பழித்த கவிஞருக்கு,  மற்றொரு பெண் வடிவத்தின் மூலம் ஆண்டாள் தக்க பாடம் புகட்டி வருவதாக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பெண்கள் சபரிமலை ஐயப்பன் சன்னதிக்கு அனுமதிக்கப்படுவது குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான ஆண், பெண் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல் இதில் பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 100 ஆண்டுகளாக பழகி வரும் பழக்கம் மதிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் அது இந்து மதத்திற்கும் பொருந்தும் என்றார். வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினர் தாஜா செய்யப்படுவதும் பெரும்பான்மையினர் உதாசீனப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    மத உணர்வும் பண்பாடும் எதிர்க்கப்பட்டால் பொங்கி எழுவோம் என்பதை இந்த கூட்டம் மெய்பித்துள்ளது என குறிபிட்ட அவர் ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தில் ஆண்டாள் முகத்திரையை கிழித்துக்கொண்டிருக்கிறாள் என்றார் என்றும் சாடியுள்ளார்.

    அவரை தொடர்ந்து பேசிய எச்.ராஜா இந்து மதத்தில் உள்ளது போல் சமநிலை வேறு எந்த மதத்திலும் இல்லை பெண்களை கடவுளாக பார்க்கும் மதம் இந்து மதம் என்றார். இனி குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இந்து என பெயர் சூட்டுங்கள் என கேட்டுக்கொண்ட அவர் ஆண்டாள் சாபம் ஆயுள் முழுவதும் தாபம் என்றார். இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் மறுசீராய்வு மனுவில் நமக்கு சாதகமான முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தின் இறுதியில் மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐயப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு குழுமியிருந்த அனைவரும் கோவில் மரபுகளை கடைபிடிப்பதாகவும் பெண்கள் கோவிலுக்கு செல்லமாட்டோம் என்று சத்ய பிரமானம் ஏற்றுக்கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: