எட்டயபுரத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை.. ரூ.6 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
பொங்கல் பண்டிகையையொட்டி, எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 6 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
- News18 Tamil
- Last Updated: January 10, 2021, 7:20 AM IST
தென் மாவட்டத்தின் ஆடுகள் விற்பனைக்கு புகழ்பெற்றதாக விளங்குவது, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை ஆகும். மதுரை, தேனி, விருதுநகர், சென்னை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆடுகள் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து செல்வர். வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த சந்தையில், சாதாரண நாட்களில் 1 கோடி ரூபாய்க்கும், பண்டிகை நாட்களில் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படும்.
இந்தநிலையில், தற்போது பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், சுமார் பத்தாயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 15000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. எடைகளுக்கு ஏற்ப 4000 முதல் 30000 வரை ஆடுகள் விற்பனையாகின.
மேலும் படிக்க... உங்கள் தொகுதி: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்