பக்ரீத் பண்டிகையை ஒட்டி களைக்கட்டும் ஆட்டு சந்தை!

ஆட்டு சந்தை

பக்ரீத் பண்டிகையை ஒட்டி நெல்லை மாநகராட்சியில் உள்ள ஆட்டு சந்தை 2 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.

 • Share this:
  பக்ரீத் பண்டிகையை ஒட்டி பல மாவட்டங்களில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

  நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி சிவகங்கை மாட்டம் திருப்புவனத்தில் உள்ள மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை அருகே ஆட்டு சந்தை நடைபெற்றது. இதில் அதிகாலை 5 மணிக்கே ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர். சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன.

  Also Read :  பக்ரீத் பண்டிகையும் தியாகமும்

  இதேபோல் கிடாய் 10 ஆயிரம் ரூபாய் முதல் 27 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சந்தையில் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் ஆடுகளை வாங்கி சென்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

  இதேபோல் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நெல்லை மாநகராட்சியில் உள்ள ஆட்டு சந்தை 2 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. சந்தை திறக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

  Also Read : அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை, நில அபகரிப்பு புகார்.

  பெரும்பாலானோர் ஏற்கெனவே ஆடுகளை வாங்கி விட்டதால் சந்தையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பக்ரீத் பண்டிகைக்காக நெல்லை ஆட்டு சந்தையை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: