திண்டுக்கலில் விலையேற்றத்தால் ஒன்றரை கோடி ரூபாயாக குறைந்த ஆட்டு வர்த்தகம்!

தென் மாவட்டங்களில் வரும் நாட்களில் ஆட்டிறைச்சியின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கலில் விலையேற்றத்தால் ஒன்றரை கோடி ரூபாயாக குறைந்த ஆட்டு வர்த்தகம்!
ஆட்டு சந்தை - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 31, 2019, 10:32 AM IST
  • Share this:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ஆட்டு சந்தையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ரம்ஜானை முன்னிட்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமான அய்யலூர் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. கரூர், திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை,கோவை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக ஆடுகளை விற்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் வாங்குவதற்கு குறைவான ஆட்களே இருந்தனர்.


ரம்ஜான் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு வழக்கத்தைவிட ஆடுகளின் விலை கூடுதலாக இருந்தது. 2,000 முதல் 3,000 வரை விற்கும் ஆடுகள் 5,000 ரூபாய்க்கு மேல் விலையேறியுள்ளதாக தினேஷ் என்ற வியாபாரி கூறினார்.

வழக்கமாக 50,000 ஆடுகள் கொண்டுவரப்படும் இந்த சந்தையில் இந்தவாரம் 1 லட்சம் ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் சந்தை களைகட்டியது. ஆனால், 4 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை கூடுதலாக இருந்ததால் ஒன்றரை கோடி ரூபாய் வரை மட்டுமே விற்பனை நடைபெற்றது.

இதனால், வரும் நாட்களில் தென் மாவட்டங்களில் ஆட்டிறைச்சியின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.Also see... EXCLUSIVE: புதிய முறையில் குடிநீர் வழங்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள குடிநீர் வாரியம்

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading