வீட்டுவசதி வாரியம் சார்பில் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு புது வீடு ஒதுக்கி அரசாணை!

வீட்டுவசதி வாரியம் சார்பில் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு புது வீடு ஒதுக்கி அரசாணை!
ஆர்.நல்லகண்ணு
  • News18
  • Last Updated: February 27, 2020, 11:24 AM IST
  • Share this:
சென்னை நந்தனம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு புது வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு குடியிருந்த தி.நகர் பகுதியில் இருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1953-ம் ஆண்டு கட்டப்பட்டது. குடியிருப்பு மிகவும் பழுதாகி இருந்ததால் அதில் குடியிருந்தவர்கள் காலி செய்யும்படி கேட்டு தமிழக அரசால் கொள்ளப்பட்டார்கள்.

அப்போது, பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு அரசு வேறு வீடுகள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


சமீபத்தில் இங்கு குடியிருந்த நல்லகண்ணு தாமாகவே முன்வந்து அவரே வீட்டை காலி செய்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது தொலைபேசிவாயிலாக பேசி நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு, உங்களுக்கு அரசு வீடு தர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பாக நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுஇதனையடுத்து,இந்திய கம்யூனிஸ்ட் மூத்த  தலைவர் நல்லகண்ணு அவர்கள் விரைவில் அரசு ஒதுக்கியுள்ள வீட்டிற்கு குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading