அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க ரூ.44 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க ரூ.44 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

கோப்பு படம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க 9 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற இளம் பருவ பெண்களிடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதவிடாய் கால தன் சுகாதாரத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நகர்ப்புறத்தில் பயிலும் மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார்.

Also read... சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் அதிமுக

அதன்படி நகர்ப்புற பள்ளிகளில் பயிலும் 14.91 கோடி மாணவிகளுக்கு வருடத்திற்கு 18 நாப்கின் பைகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக மட்டும் 34.74 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

அதே போல தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க 9 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் நாப்கின்கள் அந்தந்த பள்ளிகளுக்கே நேரடியாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: