முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விசைத்தறி நெசவாளர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்... இலவச மின்சாரத்தின் அளவு உயர்வு..!

விசைத்தறி நெசவாளர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்... இலவச மின்சாரத்தின் அளவு உயர்வு..!

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒரு மாதத்துக்கு  முன்பே அறிவிக்க வேண்டிய இத்திட்டம் ஈரோடு இடைத்தேர்தலால் காரணமாக அரசாணை ஒத்திவைக்கப்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் விழா தொடர்பாக ராயனூர் திடலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்,  எஸ்.பி சுந்தரவதனம் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி,   “தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகிறது. விசைத்தறிக்கு 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்படுகிறது. 2021 தேர்தல் வாக்குறுதிப்படி 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தப்படுகிறது.

கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு  முன்பே அறிவிக்க வேண்டிய இத்திட்டம் ஈரோடு இடைத்தேர்தலால் காரணமாக அரசாணை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது முதலமைச்சர் பிறந்த நாளையொட்டி மார்ச் 1ஆம் தேதி முன் தேதியிட்டு அறிவிக்கப்படுகிறது.

செய்தியாளர் : கார்த்திகேயன் (கரூர்)

First published:

Tags: CM MK Stalin, Minister, Senthil Balaji, Udhayanidhi Stalin