• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மு.க. ஸ்டாலின் கோவை பயணம்: Go Back Stalin இந்திய அளவில் ட்ரெண்ட்!

மு.க. ஸ்டாலின் கோவை பயணம்: Go Back Stalin இந்திய அளவில் ட்ரெண்ட்!

ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த  #GoBackStalin

ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #GoBackStalin

#GoBackStalin 1.31 லட்சம் டிவீட்களுடன் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

  • Share this:
முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் முதல்முறையாக #GoBackStalin ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனதைப் பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதுவும் இது தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் பரவத் தொடங்கியது. அது அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. அதற்கு பலன் கிடைக்கவும் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். முதலில் ஈரோடு பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை கோவை செல்ல இருக்கிறர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. மேலும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிப்பதும் இது முதல் முறையாகும். ஏற்கனவே இது போன்று ட்ரெண்ட் ஆகியிருந்தாலும் அப்போதெல்லாம் முதல் இடத்தை பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More:   ஊரடங்கு விதிகளை பின்பற்றி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.. திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ள திமுகவிற்கு கொங்கு மண்டலம் மட்டும் பின்னடைவை கொடுத்துள்ளது. அங்கு பெரும்பான்மையான இடங்களை அதிமுகவே கைப்பற்றியிருக்கிறது. இந்த சரிவினால் ஏற்கனவே கொங்கு மண்டல திமுக அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருப்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



#GoBackStalin 1.31 லட்சம் டிவீட்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனிடையே பாஜகவினர் பலரும் Go Back Stalin ஹேஷ்டேக்கில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: