ராகுல் பேச்சை மொழி பெயர்க்க மீண்டும் தடுமாற்றம்! யார் இந்த டிரான்ஸ்லேட்டர்?

ராகுல் காந்தியின் பேச்சை முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மொழி பெயர்க்க நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ராகுல் காந்தியின் பேச்சை, தங்க பாலு சரியான முறையில் மொழி பெயர்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

ராகுல் பேச்சை மொழி பெயர்க்க மீண்டும் தடுமாற்றம்! யார் இந்த டிரான்ஸ்லேட்டர்?
ராகுல் காந்தியின் பேச்சை முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மொழி பெயர்க்க நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ராகுல் காந்தியின் பேச்சை, தங்க பாலு சரியான முறையில் மொழி பெயர்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
  • News18
  • Last Updated: April 12, 2019, 7:46 PM IST
  • Share this:
கிருஷ்ணகிரி பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்க்க பேராசிரியர் பழனிதுரை தடுமாறினார். இது, காங்கிரஸ் தொண்டர்களிடையை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, ராகுல் காந்தியின் பேச்சை முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மொழி பெயர்க்க நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ராகுல் காந்தியின் பேச்சை, தங்கபாலு சரியான முறையில் மொழி பெயர்க்கவில்லை.


அதனால், தங்கபாலுவை நெட்டீசன்கள் வறுத்தெடுத்தனர். இந்தநிலையில், இன்று ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்தார். முதலாவதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, ராகுல் காந்தியின் பேச்சை பேராசிரியர் பழனிதுரை மொழி பெயர்த்தார். கடந்தமுறை, மொழி பெயர்க்க தங்கபாலு தடுமாறியதைப்போல, பழனிதுரையும் இந்த முறை தடுமாறினார். தொடக்கத்தில், ராகுல் காந்தியிடமிருந்து இடைவெளி விட்டு பழனிதுரை நின்றார். ராகுலின் பேச்சை மொழி பெயர்க்க, பழனிதுரை தடுமாறியதை அடுத்து, அவரை அருகில் அழைத்து நிற்கச் சொன்னார் ராகுல் காந்தி.

ராகுல் காந்திக்கு சரியான மொழி பெயர்ப்பாளர்கள் வழங்கப்படாதது, காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர், சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சை தி.மு.கவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவனும், தேனியில் பீட்டர் அல்போன்ஸ்ம் மொழிபெயர்த்தனர். அவர்களுடைய மொழி பெயர்ப்பு தொண்டர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading