அதிமுக ஆளுங்கட்சியாகவே தொடரும்... திமுக எதிர்க்கட்சியாக தொடரும் - ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

மத்திய மாநில அரசின் திட்டங்களை மக்களுக்கு கொடுத்து உறுதிப்படுத்திய சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் கடம்பூர் ராஜு இருக்கிறார்....

 • Share this:
  வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஆளுங்கட்சியாகவே தொடரும் என்றும் திமுக எதிர்க்கட்சியாக தொடரும் என, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

  கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகே ஜி.கே வாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மண்ணின் மைந்தன் போட்டியிடுகிறார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு வளர்ச்சிப்பணிகள் கொடுத்து உங்களுடன் இருக்கக்கூடிய நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் தேவையா அல்லது, பொழுது போக்குக்காக இங்கு வந்து செல்லக்கூடிய தற்காலிக சட்டமன்ற உறுப்பினர் தேவையா என்பதனை முடிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு.

  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அனைத்து துறைகளும் 100 சதவீத வளர்ச்சி அடைந்ததுள்ளது. இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும். மத்திய மாநில அரசின் திட்டங்களை மக்களுக்கு கொடுத்து உறுதிப்படுத்திய சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் கடம்பூர் ராஜு இருக்கிறார்.

  கோவில்பட்டி நகருக்கு இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம், அரசு கலைக்கல்லூரி, சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம், தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு, கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு என கோவில்பட்டியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் அமைச்சர் கடம்பூர் ராஜு. இந்தியாவில் மகளிருக்கு அதிகமான திட்டங்களை தந்தது தமிழகம்தான். அதுவும் அதிமுக அரசு என்பதை மகளிர் மறந்து விடக்கூடாது.

  மகளிர் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் என்பதனை கருத்தில் கொண்டுதான் மகளிர் சுயஉதவிக் குழு கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஆளுங்கட்சியாகவே தொடரும், திமுக எதிர்க்கட்சியாக தொடரும். மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ள கட்சிகள் ஒரு படி மேலே செல்லாமல் அதே இடத்தில் ஸ்தம்பித்து போவார்கள்.

  திமுக என்றாலே பொய் பித்தலாட்டம் என்று மக்களும் வாக்காளரும் நினைக்கின்றனர். பொய் சொல்லி வாக்கு கேட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைக்கின்றனர். வடிகட்டிய பொய்களைச் சொல்லும் திமுகவிற்கு வாக்காளர்கள் வாக்களிக்காமல், திமுகவை ஏமாளியாக்க போகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.

  ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருகிறேன் என்பது முதல் இல்லாதவர்களுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் என்பது வரை திமுக சொன்னதை நிறைவேற்றவில்லை. நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை இரண்டு வருடங்களாகியும் நிறைவேற்றவில்லை. சொன்னதை திமுக செய்யவில்லை, ஆனால், சொல்லாதவற்றையும் செய்வேன் என்று நிரூபித்து அதிமுக கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகை கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

  Must Read : தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு கொரோனா பரிசோதனை

   

  கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வளர்ச்சித் திட்டங்களை கொடுத்த அதிமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். அதிமுக அரசின் திட்டங்களை தடுக்க வேண்டும். எம்ஜிஆர் ஜெயலலிதா புகழுக்கு களங்க ஏற்படுத்த வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் இருக்க கூடாது என்று சதி செய்கிறது திமுக.” என்று கூற கடம்பூர் கடம்பூர் ராஜுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
  Published by:Suresh V
  First published: