Home /News /tamil-nadu /

அ.தி.மு.கவை பா.ஜ.க பிரித்துவிட்டது என்பது தவறு - ஜி.கே.வாசன் விளக்கம்

அ.தி.மு.கவை பா.ஜ.க பிரித்துவிட்டது என்பது தவறு - ஜி.கே.வாசன் விளக்கம்

 ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

அ.தி.மு.கவே தமிழகத்தில் எதிர்கட்சி, அதை பா.ஜ.க ஏற்று கொள்ளும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவை பா.ஜ.க தான் பிரித்து விட்டது எனும் கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘அ.தி.மு.க தமிழகத்தில் மிக பலமான கட்சி. அ.தி.மு.க தமிழகத்தில் எதிர்கட்சிகளாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.கவுடன் பா.ஜ.க ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.கவை பா.ஜ.க பிரித்து விட்டது என்ற கருத்து தமிழகத்தின் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளின் பயத்தை காட்டுகிறது.

2024 தேர்தலை முன்னிட்டு தமிழக கட்சிகளுக்கு இருக்கும் பயத்தை ஒட்டியே இப்படியான கருத்தை பரப்புகிறார்கள். தமிழகத்தில் எதிர்கட்சியாக அ.தி.மு.க தான் உள்ளது. இதை பா.ஜ.க ஏற்றுக்கொள்ளும். அ.தி.மு.க, பா.ஜ.கவுக்குள் எந்த போட்டியும் கிடையாது

தி.மு.க ஒராண்டு ஆட்சியில் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து உள்ளனர். தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பி வருகிறது. ஓராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை. தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கை தி.மு.க தலைமையிலான அரசு நிலை நாட்ட வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. போதை ஒழிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும். பாலியல் வழக்குகளில் குற்றவாளிக்கு உறுதியான தண்டனை வழங்கவேண்டும். 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வழக்குகளுக்காக மாவட்டந்தோரும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: ADMK, BJP, GK Vasan

அடுத்த செய்தி