கூட்டணி முறிந்தது - உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி

ராமதாஸ் - ஜி.கே.மணி

கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • Share this:
    தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாமக. அந்த தேர்தலில பாமக சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிரடியிக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த தேர்தலில் பாமக வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில், இணைய வழியில் நடந்தது.

    இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி (இன்று), 16ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள்.

    Must Read : மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்: ராமதாஸ் கண்டனம்

    விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலை குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: