மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே மணி, “மேகதாதுவில் கார்நாடக அரசு அணை கட்ட கூடாது. காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு கடைமடை மாநிலம். கடைமடை மாநிலத்துக்குதான் அதிக உரிமை என நதிநீர் சட்டங்கள் கூறுகின்றன. இந்திய நாட்டின் இரு சகோதர மாநிலங்களின் பிரச்சனை 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் காவிரி விவகரத்தில் உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்பை கர்நாடக அரசு ஏற்று நடக்க வேண்டும். உரிய நேரத்தில் முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். மேகதாது பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். கர்நாடக அரசுக்கு அளித்த திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் உரிமை தமிழகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. அனைத்து கட்சி குழு டெல்லி சென்று பிரதமரை சந்திப்போம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் இது வரவேற்க தக்கது. அதேபோல் வரும் சட்ட மன்ற கூட்ட தொடரில் தீர்மானம் நிரைவேற்ற வேண்டும்.” என்று கூறினார்.
தொல். திருமாவளவன்
அணைத்து கட்சி கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், “அணைத்து கட்சி கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. எதிர் கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பை நல்கும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் இந்த முயற்சிக்கு துணை போக கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.
முதலமைச்சரின் தலைமையில் அனைத்து கட்சி குழு பிரதமரை சந்திக்க திட்டம் உள்ளிட்ட, ஆளும் கட்சி எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் விசிக ஆதரவாக இருக்கும். மேகதாதுவில் அனைகட்டுவது தமிழக்கத்தின் எதிர்காலத்துக்கு எதிரானது. அனைகட்டுவதற்கு எதிராக, கட்டாயமாக வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் கேள்வி எழுப்புவோம் ஆற்று நீர் உரிமைக்கு குரல் கொடுப்போம்.” என்று கூறினார்.
கே.பாலகிருஷ்ணன்
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசின் முடிவை பாராட்டி வரவேற்றுள்ளோம். உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பில் பெங்களூர் நகரின் நீர் தேவையை கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மீண்டும் குடிநீர் பிரச்சனையை காரணம் காட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. சட்ட போராட்டம் நடத்தி ஒன்றிய அரசை வலியுறுத்தி விரைவில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார்.
இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், “கர்நாடக அரசு தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு துணை போகிறது. முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூடியதும் தீர்மானம் நிறைவேற்றியதும் வரவேற்க தக்கது. கர்நாடக அரசின் முயற்சிகளில் ஒன்றிய அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும்.
Must Read : நிர்வாக வசதிக்காக கொங்குநாடு அமைவதில் தவறில்லை: கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி பேச்சு!
இது நதிநீர் பிரச்சனை மட்டுமல்ல இது தேசத்தின் ஒருமைப்பாட்டு பிரச்சனை. பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என்கிற அடிப்படையில் தமிழத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.” என்றார். இதேபோல கூட்டத்தில் பங்கேற்ற பாஜக உள்ளிட்ட 13 கட்சியினரும் காவிரி ஆற்றுக்கு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழக அரசின் முடிவுக்கு துணை நிற்பதாக உறுதிகூறினர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: All Party Meeting, Mekedatu dam, MK Stalin