HOME»NEWS»TAMIL-NADU»gk mani said no conflict between pmk and dmdk skd vel

தே.மு.தி.க, பா.ம.க கூட்டணியில் எந்த முரண்பாடுகளும் இல்லை - ஜி.கே.மணி விளக்கம்

தே.மு.தி.கவுக்கும், பா.ம.கவுக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்று பா.ம.கவின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க, பா.ம.க கூட்டணியில் எந்த முரண்பாடுகளும் இல்லை - ஜி.கே.மணி விளக்கம்
ஜி.கே.மணி
  • Share this:

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ம.க அலுவலகத்தில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் நிகழ்வு இன்று தொடங்கியது. விருப்ப மனுக்கள் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.10,000, தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000, அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து பா.ம.க நிர்வாகிகள் பலர் இன்று 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்களின் விருப்ப மனுக்களை தி.நகர் அலுவலகத்தில் பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே மணி முன்னிலையில் சமர்ப்பித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே மணி, ‘தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. இன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம.க வினர் விருப்ப மனுக்களை அளிக்கவுள்ளனர்.
கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் முடிவெடுக்க மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் கூட்டணி குறித்து முடிவை விரைவில்அறிவிப்பார். வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் ராமதாஸ் முடிவை அறிவிப்பார். சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தெரியவரும் என்றார்.

தே.மு.தி.க, பா.ம.க கூட்டணியில் எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை. சமூக வலைத்தளங்களில் தே.மு.தி.க, பா.ம.க கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை என வெளியான தகவல் தவறு என எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார். நாங்களும் பல்வேறு தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறோம். எனவே எங்கள் கூட்டணியில் முரண் ஏதும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ம.க சார்பில் வலியுறுத்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை அ.தி.மு.க அரசு நிறைவேற்றியுள்ளது. சில கோரிக்கைகள் பரிசீலணையில் உள்ளன. அரசு செய்த நலத்திட்டங்களை பா.ம.க பாராட்டியதும் உண்டு. குறைகளை சுட்டிக்காட்டியதும் உண்டு.



தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியது. விவசாயக் கடன் தள்ளுபடி, குடிமராமத்துப் பணிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என பல்வேறு வரவேற்கத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை பா.ம.கவிற்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: