Home /News /tamil-nadu /

அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் - ஜி.கே.மணி

அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் - ஜி.கே.மணி

ஜி.கே.மணி

ஜி.கே.மணி

Pongal Gift : பொங்கல் பரிசு தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசுக்கு பாமக வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு நாளை வைக்க உள்ளோம் என்று பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

    இது குறித்து பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2022 ஆண்டு தமிழக மக்களுக்கு நல்ல ஆண்டாக வளர்ச்சி மிக்க ஆண்டாக அமைய வேண்டும் மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருப்போமென ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முல்லைப் பெரியாறு அணை 142 அடியிலிருந்து 152 அடி உயர்த்தப்படும், மகளிர் மேம்பாட்டிற்கும் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட வரவேற்கக் கூடிய நல்ல அம்சங்கள் உடையதாகவும் தமிழக மக்கள் எதிர்பார்த்தவை இல்லாததான உரையாக ஆளுநர் உரை என்ற நிலை உள்ளது.

    பொங்கல் பரிசு தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசுக்கு நாளை வைக்க உள்ளோம். மேலும் கொரோனோ நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மருத்துவ சான்றுகள் இல்லாதவர்கள் போன்ற உயிரிழந்த அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை மிகப்பெரிய அளவிலான சேதத்தை உண்டாக்கியுள்ளது குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிகமாக சேதமடைந்துள்ளது,சேதத்தை போக்குவதற்கு வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும்.

    தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்பது. ஆனால் மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கமல் உள்ளது மத்திய அரசு உடனடியாக நீட்டிற்கு விளக்களிக்க வேண்டும்.

    அரசு போதைப்பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வந்தாலும் சர்வ சாதாரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மிக அருகில் உள்ள கடைகளிலும் போதைப் பொருட்கள் கிடைக்கிறது,போதைப்பொருளை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களைக் கொண்டு போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே பாமகவின் நிலை.

    Must Read: தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது 

    ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டுகிறது ஆகவே முழுமையாக கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வந்து முற்றிலும் தடை செய்ய வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: PMK, Pongal Gift, TN Assembly

    அடுத்த செய்தி