ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேகதாது அணை தொடர்பாக தமிழகம் சார்பில் அனைத்துக் கட்சி குழு மத்திய அரசை சந்திக்கவேண்டும்- பாமக தலைவர் ஜிகே மணி வலியுறுத்தல்

மேகதாது அணை தொடர்பாக தமிழகம் சார்பில் அனைத்துக் கட்சி குழு மத்திய அரசை சந்திக்கவேண்டும்- பாமக தலைவர் ஜிகே மணி வலியுறுத்தல்

ஜி.கே.மணி

ஜி.கே.மணி

தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்திலிருந்து ஒரு குழு சென்று மத்திய அரசை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென வலியுறுத்த வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜிகே மணி, ‘மேகதாது அணை குறித்து அரசின் தீர்மானமாக நீர்வளத்துறை அமைச்சர் முன்மொழிந்து பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு ஒரே குரலாக ஒலிக்கிறது. தமிழ்நாட்டின் உரிமை காக்கப்பட வேண்டும்.

  தொடர்ந்து ஒவ்வொரு முறையும் காவிரி உரிமை பற்றி பேசி வருகிறோம். ஆனால் எவற்றையும் மதிக்காமல் அணை கட்டியே தீருவோம் என பிடிவாதமாக செயல்பட்டு வருகிறது கர்நாடக அரசு. காவிரி இல்லையெனில் தமிழகம் மிக பெரிய சோதனையை சந்திக்க நேரிடும். தமிழகத்தில் 12 மாவட்டங்கள் விவசாயத்திற்காக காவிரியை நம்பியிருக்கிறது. மேலும் 25 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

  தமிழ்நாடு எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் காவிரியில் மேகதாது அணை கட்டி முடிக்கப்பெற்றால் ஒரு சொட்டு நீர் கூட தமிழகம் வராது. தமிழகத்தின் அனுமதியை பெறாமல் 40 அடி அளவிற்கு வாய்க்கால் அமைத்து 40 TMC அளவிற்கான நீரை தேக்கி ஏரிகளை உருவாக்கி பாசன பரப்பை அதிகரித்துள்ளனர்.

  நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு மாதம் மாதம் தண்ணீர் விட வேண்டும். ஆனால் மழை காலங்களில் கிடைக்கும் உபரி நீரை மட்டுமே வழங்கி வருகிறது கர்நாடக அரசு. பெங்களூரு குடிநீர் ஆதாரத்திற்காக மேகதாதுவில் அணை காட்டுவதாக கூறுகிறது கர்நாடகா அரசு. ஆனால் பாசனத்திற்க்காகதான் அணை கட்ட நினைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

  நடைபெற்ற பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் அணை கட்டுவதற்கு ஒதுக்கியுள்ளது கர்நாடக அரசு. மேலும் மூன்று நாட்களுக்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து உள்ளதாக முடிவெடுத்துள்ளது கர்நாடகா அரசு. 2023 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அணையைக் கட்ட அடிக்கல் நாட்ட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது கர்நாடக அரசு.

  மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழக அரசிற்கு மட்டுமே உள்ளது. தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்திலிருந்து ஒரு குழு சென்று மத்திய அரசை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென வலியுறுத்த வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Kerala, Mekedatu dam, MK Stalin, Tamilnadu