பாமக தேர்தல் அறிக்கை மார்ச் 5-ல் வெளியீடு: ஜி.கே.மணி அறிவிப்பு

ராமதாஸ்

மார்ச் 5 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் வெளியிடப்பட உள்ளது.

  • Share this:
    பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

    2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் (05.03.2021) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read: அ.தி.மு.க, தே.மு.தி.க இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

     

    அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு, தமிழக சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: