ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கடைகளில் புதிய பொருள்..அமைச்சர் சக்கரபாணி சொன்ன முக்கிய தகவல்!

ரேஷன் கடைகளில் புதிய பொருள்..அமைச்சர் சக்கரபாணி சொன்ன முக்கிய தகவல்!

நியாயவிலை கடை

நியாயவிலை கடை

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவைராமநாதபுரம் 80அடி சாலைப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில்  உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி  நேரில் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும், ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் , பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும், இதனை முதலமைச்சர் சென்னையில் துவக்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்.

இந்த பொங்கல் பரிசு 9 முதல் 12 ம் தேதி வரை4 தினங்களில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் எனவும், அப்போது வாங்க முடியாதவர்களுக்கு 13ம் தேதியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். பொங்கல் தொகுப்பு பொருட்கள் நூறு சதவீதம் தயாராக உள்ளது, கரும்பு 90 சதவீதம் வந்துள்ளது என தெரிவித்த அவர், கருணாநிதியின் ஆட்சி காலத்தில் புரதச் சத்துமிக்க உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என சிறப்பு பொது விநியோக திட்டம் துவங்கப்பட்டு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது எனவும், அதில் கடந்த ஆட்சியில் இரண்டு பொருட்களை நிறுத்தி விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் வாங்க முடியவில்லை. எனவே, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னோட்டமாக சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய இரண்டு இடங்களில் துவக்கப்பட்டுள்ளது எனவும், அனைத்து மாவட்டங்களிலும் அதனை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட்டு கைரேகை, கருவிழி மூலம் பொருட்கள் பெறுவது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Coconut oil, Ration Shop, Tamil Nadu