சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய இணையமைச்சர் கவுசல் கிஷோர், மதுவுக்கு அடிமையான ஆண்களுக்கு உங்கள் மகளையோ, சகோதரியையோ திருமணம் செய்துவைக்க வேண்டாம். மதுவுக்கு அடிமையான அதிகாரிக்கு உங்களது மகளை திருமணம் செய்துவைப்பதைக் காட்டிலும் குடிப்பழக்கம் இல்லாத கூலித் தொழிலாளருக்கோ, ரிக்ஷா ஓட்டுநருக்கோ உங்கள் மகளை திருமணம் செய்துத் தரலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
மதுவுக்கு அடிமையான தனது மகன் விபத்தில் உயிரிழந்தை குறிப்பிட்டு இவ்வாறு உருக்கமாக கூறியிருந்தார் கவுசல் கிஷோர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில், "மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; டிஎன்பிஎஸ்சி நியமனங்கள் போதுமானவையல்ல - ராமதாஸ்
மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல....நாளை அல்ல....இன்றே, இந்த நிமிடமே மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும் எனவும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், “மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol, Dr Ramadoss, Tamilnadu government