Home /News /tamil-nadu /

வேதா இல்லத்தின் சாவியை கொடுங்க... சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு..

வேதா இல்லத்தின் சாவியை கொடுங்க... சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு..

வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம் தீபா, தீபக் சார்பில் மனு அளித்துள்ளனர்.

வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம் தீபா, தீபக் சார்பில் மனு அளித்துள்ளனர்.

வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம் தீபா, தீபக் சார்பில் மனு அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை போயஸ் கார்டனில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றி அரசுடைமையாக்கியது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபாவும், தீபக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வேதா இல்லத்துக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.67 கோடியே 90 லட்ச ரூபாயை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்தனர். ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம் என்பது தனிநபர் சொத்தாக இருப்பதால் அதனைக் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை' எனவும் மனுதார்கள் வாதிட்டனர்

    வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி இழப்பீட்டுத் தொகையை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்தியது தவறு' என்றும் ‘வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாததாக அறிவிக்க வேண்டும்’ எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    அதேநேரம், அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டதாகவும் அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட காலங்களில் மனுதார்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை எனவும் கூறப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சேஷசாயி, ‘வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய உத்தரவு செல்லாது’ என தீர்ப்பளித்தார். மேலும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி சேஷசாயி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபா, தீபக் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து மனு அளித்துள்ளனர்.

    இந்த மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Jayalalitha, Poes Garden, Vedha House

    அடுத்த செய்தி