Home /News /tamil-nadu /

மின் கட்டணத்தை 2 மாதங்களுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் கோரிக்கை

மின் கட்டணத்தை 2 மாதங்களுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் கோரிக்கை

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

மின்கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மின் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் தனது ட்விட்டர் பதிவில், ”கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராததால், இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் 300 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்.

    மேலும், தமிழகம் முழுவதும் மின் கட்டணத்திற்கான வரம்பை (Slab) நிர்ணயிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எழுந்திருக்கும் புகார்களின் மீது உரிய கவனத்தோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Electricity bill, TTV Dinakaran

    அடுத்த செய்தி