கடலூரில் காதலர் தினத்தை முன்னிட்டு பெற்றோர்களை அலார்ட் செய்துள்ளது பெண்கள் தனியார் கல்லூரி நிர்வாகம்.
ஒவ்வொரு வருடத்திலும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உலக எங்கிலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று கடற்கரை, பூங்காக்கள், பொழுது போக்கு விடுதிகள், தீம்பார்க்குகளில் கூடி காதலர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் கடலூரில் பாரதி சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்லூரியின் சார்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அதில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு கல்லூரி நேரம் முடியும் முன்பே முன்கூட்டியே கல்லூரியிலிருந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்து செல்லலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாணவிகளின் பாதுகாப்பை கருதி, தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல விரும்பும் பெற்றோர்கள் மதியம் 12.55 மணிக்கே கல்லூரிக்கு வந்து அழைத்து செல்லலாம் என்று அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.