ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அவனை மறக்க முடியவில்லை.. தற்கொலைக்கு முன் பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ

அவனை மறக்க முடியவில்லை.. தற்கொலைக்கு முன் பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ

தற்கொலை செய்துகொண்ட ஏஞ்சல்

தற்கொலை செய்துகொண்ட ஏஞ்சல்

ஏஞ்சலின் தன்னுடையசெல் போனில் அவர் இறப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்றில் தன்னுடைய தற்கொலைக்கு நானே காரணம் என்றும் காதல் தோல்வியால் தனது காதலனை மறக்க முடியவில்லை எனவும் அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை மணலி அருகே ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் உருக்கமான வீடியோ வெளியிட்டு காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை மணலி பகுதியை சேர்ந்த ஏஞ்சல் என்பவரும் அவரது எதிர்வீட்டில் வசித்து வரும்  தனுஷ் என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஏஞ்சல் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது.  அதில் தனுஷ் வேறொரு பெண்ணோடு பழகி வருவதாகவும் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வந்துள்ளது.

  இதுகுறித்து ஏஞ்சல் தனது காதலன் தனுஷ் இடம் விளக்கம் கேட்க அதற்கு அவரும் ஆமாம் நான் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் என்னை மறந்து விடு எனவும் கூறியுள்ளார்.இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான ஏஞ்சல் இது குறித்து கடந்த இரண்டு நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

  இதையும் படிங்க:மேடையில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலுவுக்கு காலணி எடுத்து தந்த நபர் - வைரலாகும் வீடியோ

  இதனைத் தொடர்ந்து நேற்று மாலை இதுகுறித்து தனுஷ் வீட்டிற்கு சென்ற ஏஞ்சல் தான் ஏமாற்றப்பட்டதை அவருடைய பெற்றோரிடம் தெரிவித்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர்களும் அவன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கும் எனவும் இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.

  இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான ஏஞ்சல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து உடனடியாக சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

  அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர்ஏஞ்சலின் செல்போனை ஆய்வு செய்தனர்.

  இதையும் படிங்க: அடுத்த சில மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

  அப்போது ஏஞ்சலின் தன்னுடையசெல் போனில் அவர் இறப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்றில் தன்னுடைய தற்கொலைக்கு நானே காரணம் என்றும் காதல் தோல்வியால் தனது காதலனை மறக்க முடியவில்லை எனவும் அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதற்காக தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனவும் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சென்னை மாதவரம் பால் பண்ணை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால்இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: அசோக் குமார் .M


  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


  Published by:Arunkumar A
  First published:

  Tags: Crime News