11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இரட்டை சகோதரர்கள்!

சம்பவம் நடந்த போது மாதவன், சிறுமியின் பின்னால் சென்றதை பார்த்த கிராமத்தினர், விசாரணையின் போது போலீசாரிடம் தெரிவித்தனர். அந்த அடிப்படையில்தான் மாதவன் போலீசாரிடம் சிக்கியுள்ளார். தகவல் அறிந்து மது தப்பியோடி விட்டார்.

11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இரட்டை சகோதரர்கள்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 16, 2019, 12:54 PM IST
  • Share this:
மதுரையில் 11-ம் வகுப்பு மாணவியை இரட்டை சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கல்லைத் துாக்கித் தலையில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நகரைச் சேர்ந்த அந்த சிறுமி, கடந்த வாரம் பெற்றோருடனும் தம்பியுடனும் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள அம்மன் கோவிலில் பொங்கல் விழா என்பதால் பெற்றோர் சிறுமியை பாட்டி வீட்டில் விட்டு விட்டு ஊர் திரும்பினர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் பாட்டியின் தோட்டத்திற்கு குளி்க்கச் சென்றார் சிறுமி. நெடுநேரமாகியும் திரும்பாததால் பாட்டியும் உறவினர்களும் தேடியுள்ளனர், இருட்டி விட்டதாலும், மழை பெய்ததாலும் தேட முடியவில்லை,


மறுநாள் காலை தோட்டத்தின் அருகில் ஒரு பாறை இடுக்கில் சிறுமி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சேடப்பட்டி போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான மாதவன் என்பவர் சிக்கினார். அவர் அளித்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தன.

சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாதவன், மது என்ற இரட்டை சகோதரர்கள். இவர்கள் தங்கள் பெற்றோருடன் தெலுங்கானாவில் கிராமம் ஒன்றில் வசித்து வருகின்றனர்.அங்கு அப்பளம் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தொழில் மந்தம் காரணமாக சகோதரர்கள் மட்டும் ஊர் திரும்பினர். கிராமத்தில் ஒலிபெருக்கி வைத்து அதை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தனர்.

சகோதரர்களில் மாதவன், காதல் திருமணம் செய்தவர். 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சிறுமி மீது மாதவனுக்கு ஆசை பிறந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று, சிறுமி தோட்டத்திற்கு செல்வதைப் பார்த்து விட்டு மாதவனும் பின்னால் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியிடம், தனியாகப் பேசவேண்டும் அருகில் உள்ள குன்று பக்கம் வா என்று கூறியுள்ளார். கள்ளம்கபடமில்லாத சிறுமியும் மாதவனை நம்பி சில அடி துாரத்தில் உள்ள குன்றின் அடிவாரத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சிறுமியிடம் மாதவன் அத்துமீற அதிர்ச்சியடைந்த சிறுமி எதிர்த்த தப்பியோட முயன்றுள்ளார். சிறுமியைக் கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மாதவன்.

ஊரில் திருவிழா என்பதால் ஒலிபெருக்கியின் சத்தத்தில் சிறுமியின் அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. சிறுமி தப்பியோட முயன்றபோது மாதவனின் சகோதரனான மது அங்கு வந்தார்.

சிறுமியை கீழே தள்ள முயன்றபோது பாறையில் தலை அடிபட்டு சிறுமி மயங்கி விழுந்தார். மயங்கிய நிலையிலேயே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மது.

சிறுமி மயக்கம் தெளிந்து எழுந்தால் கிராமத்திற்குள் சென்று தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவார் என இருவரும் பயந்தனர். அதனால் அங்கிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுக் கொலை செய்து விட்டு வீடு திரும்பி விட்டனர்.

சம்பவம் நடந்த போது மாதவன், சிறுமியின் பின்னால் சென்றதை பார்த்த கிராமத்தினர், விசாரணையின் போது போலீசாரிடம் தெரிவித்தனர். அந்த அடிப்படையில்தான் மாதவன் போலீசாரிடம் சிக்கியுள்ளார். தகவல் அறிந்து மது தப்பியோடி விட்டார்.

Also see...

First published: October 16, 2019, 12:54 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading