• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுகவுக்கு எதிராக மீண்டும் அனிதாவை கையில் எடுத்த அதிமுக!

திமுகவுக்கு எதிராக மீண்டும் அனிதாவை கையில் எடுத்த அதிமுக!

அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசுக்கு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், அம்பத்தூரில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் முகமூடி அணிந்த பெண்ணை ஒருவரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைத்துள்ளனர். திமுகவுக்கு எதிராக அனிதா விவகாரத்தை அதிமுக பயன்படுத்துவது இது முதல்முறை அல்ல.

  • Share this:
    சென்னை அம்பத்தூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர் தலைமையில் திமுகவிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவை போல முகமூடி அணிந்தும் அனிதாவை போல் உடை அணிந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று கூறி அதிமுக சார்பில் சுமார் 220 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னை அம்பத்தூர்  மற்றும் ஆவடியில் அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி அலெக்சாண்டர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.  அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஒரகடம் ,முகப்பேர், திருமங்கலம்,  ஆவடி ஜேபி எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில்  அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்  எனவும் டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    அனிதா வேடமிட்டு ஆர்ப்பாட்டம்


    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உயிர்நீத்த அனிதாவின் முகமூடி அணிந்து அவரைப் போலவே சிவப்பு நிற சுடிதார் உடை அணிந்த பெண் ஒருவர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்ந்தவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுகின்றனர் - ஏ.கே.ராஜன் குழு உறுப்பினர் தகவல்!


    அனிதாவும் நீட் தேர்வும்:

    தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்தார். எனினும், நீட் தகுதித் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்கள் பெற்றார். தனது கனவு படிப்பான மருத்துவத்தை படிக்க முடியவில்லை என்பதால் அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதன் பின்னர், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை கிளம்பியது.

    மேலும் படிக்க: தமிழக அரசின் விருதை ஏற்கிறேன், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மக்களுக்கு போகட்டும் - சங்கரய்யா!


    அனிதாவும் அதிமுகவும்:

    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. அதில்,  மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  அப்போதைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தும் நீட் தேர்வை தி.மு.க கொண்டுவந்தது என்பது போலவும் அனிதாவின் ஆன்மா பேசுவதுபோல வீடியோவில் குரல் இடம் பெற்றிருந்தது.



    இந்த வீடியோ தொடர்பாக மாஃபா பாண்டியராஜனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து , வீடியோ பதிவேற்றப்பட்டதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தனது அனுமதி இல்லாமல் வீடியோ பதிவேற்றப்பட்டதாகவும் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்திருந்தார்.  தற்போது, அனிதாவை போன்று உடையும் முகமுடியும் அணிந்த நபரை வைத்து அதிமுக போராட்டம் நடத்தியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: ஏ.என்.கன்னியப்பன் - அம்பத்தூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: