ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

கூட்டத்தில் நாக்கை நீட்டிய செஞ்சி மஸ்தான் செயலால் சிரிப்பலை

கூட்டத்தில் நாக்கை நீட்டிய செஞ்சி மஸ்தான் செயலால் சிரிப்பலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

இறுதி மூச்சு உள்ள வரை தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார் என கூட்டத்தில் தன் நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான் செயலால் சிரிப்பலை எழுந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம் நகர செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார். இதில் திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்பந்தம் காரணமாக கூட்டணி கட்சிக்கு நாம் சீட்டுக்கள் தந்தோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என பேசினார்.

இதையும் படிங்க: கடனை கட்டாததால் ஏலம் போன மதுவந்தியின் வீடு.. ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயம் என பரபரப்பு புகார்

ஸ்டாலின் எந்த காலமும் முதல்வராக ஆக முடியாது என சொன்னார்கள். ஆனால் நான் அன்றே சொன்னேன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார் என்று.  நான் சொன்னால் பலிக்கும். என் நாக்கு கருநாக்கு நானும் ஜோசியக்காரன் என் நாக்கை பாருங்கள்" என கூறி தனது நாக்கை வெளியே நீட்டியவாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறிது நேரம் நின்றால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

செய்தியாளர் : குணாநிதி ஆனந்தன், விழுப்புரம்

First published:

Tags: Gingee, Villupuram