மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக காண விரும்புகிறேன் - குலாம் நபி ஆசாத்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழ்நாட்டுக்கு மாபெரும் கொடையாக அமையும்

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக காண விரும்புகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

  காணொலி கட்சிமூலம், மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற குலாம் நபி ஆசாத், மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சென்னை மாநகர மேயராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

  அவர் இன்னமும் ஏற்காத பதவி முதலமைச்சர் பதவிதான். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஆகிவிடுவார். அவரை நான் முதலமைச்சராகக் காண விரும்புகிறேன். அவருடைய ஆட்சி தமிழ்நாட்டுக்கு மாபெரும் கொடையாக அமையும் என்று கூறியுள்ளார்.

  Must Read: 8 தொகுதியில் வென்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் - வைகோ

   

  இந்நிலையில், இதே கூட்டத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ‘தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் போரில் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார்’ என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: