ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அலெர்ட்!

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அலெர்ட்!

இடி, மின்னலுடன் மழை

இடி, மின்னலுடன் மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமாண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. .

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமாண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Heavy rain, Weather News in Tamil