தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.. திருபுவனம் பட்டு புடவை..!- புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் இரண்டு நாள் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது!
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.. திருபுவனம் பட்டு புடவை..!- புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் இரண்டு நாள் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது!
புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் இரண்டு நாள் கண்காட்சி
Geographical indication Thanjavur | புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை குறித்து பொதுமக்களிடமும், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகையில், தஞ்சை மணிமண்டலத்தில் இரண்டு நாள் கண்காட்சி நடைபெறுகிறது.
புவிசார் குறியீடு கண்காட்சி பற்றிய விவரம் நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும் தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை 10 தனித்துவமான பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, ஓவியம், கலைத்தட்டு, சுவாமிமலை வெண்கலப் பொருட்கள், நெட்டிமாலை வேலைபாடுகள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, திருபுவனம் பட்டு புடவை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்பொருட்கள் குறித்து பொதுமக்களிடமும், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தஞ்சை மணிமண்டபத்தில் இரண்டு நாள் கண்காட்சி நடைபெறுகிறது.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இப்பொருட்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், மேலும் இப்பொருட்களை சந்தை படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கைவினை தொழிலாளர்கள் கூறுகையில், இது போல் கண்காட்சி அமைப்பதன் மூலம் இந்த பொருட்கள் மக்களிடையே சென்றடையும், இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும். இதை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோல் பல்வேறு இடங்களில் இதுபோன்ற கண்காட்சிகளை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.