1,000 மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1000 இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காகவும், பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வும் இன்று முதல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த முறை 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, ஊரக மருத்துவ பணிகள் துறை சார்பில் உள்ள மருத்துவர்கள் இதில் பங்கேற்கின்றனர். மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
Must Read : 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்
கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள மருத்துவர்களுக்கான பணியிடங்கள் சமம் செய்யப்படுவதோடு, புதிய காலி பணியிடங்கள் கண்டறியப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Doctors, Govt hospital