Home /News /tamil-nadu /

பாலின மாற்று சிகிச்சை மருத்துவ தொழிலின் தவறான நடத்தை..! - தேசிய மருத்துவ ஆணையம் நீதிமன்றத்தில் தகவல்

பாலின மாற்று சிகிச்சை மருத்துவ தொழிலின் தவறான நடத்தை..! - தேசிய மருத்துவ ஆணையம் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சுய பாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சையை, மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மருவிய பாலினத்தவர்களின் சுய பாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சையை, மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என அறிவித்துள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மருவிய பாலின மற்றும் ஒரு பாலீன ஈர்ப்பு நபர்களின் உரிமை பாதுகாப்பு தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மருவிய பாலினத்தவர்களின் சுய பாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சையை  மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என அறிவித்துள்ளதாகவும், இதுகுறித்து முடிவெடுக்க மாநில மருத்துவ கவுன்சில்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ | சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்..! - தடுப்பூசி போடாதவர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்!

மேலும், மருவிய பாலினத்தவர்களின் சுய பாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சை என்பது மருத்துவ தொழில் தவறான நடத்தை என தேசிய மருத்துவ ஆணையத்தின் வரைவு விதிகளில் சேர்ப்பது குறித்து அடுத்த விசாரணையின் போது விளக்கமளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மருவிய பாலினத்தவர்களின் உரிமைகள், பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகளை அறிவிக்க 12 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Published by:Anupriyam K
First published:

Tags: Case, HighCourt, LGBT

அடுத்த செய்தி