சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்குவது போல தேங்காய் கீற்று வழங்கவும் அரசு முன்வருமா என சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தாத உயிர்மை வேளாண் பொருட்களை மதிய உணவில் பயன்படுத்தும் போது மாணவர்களில் புதிய சிந்தனை திறன் வளரும் என்றும், கலைஞர் சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்கினார் அதுபோல தேங்காய் கீற்று வழங்கவும் அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
Also Read: திருவண்ணாமலை மக்களுக்கு குட் நியூஸ்.. 9660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு கூடங்களில் 1,024 கூடங்களில் வேளாண் தோட்டங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பட்டு வருவதாகவும், அதே போல ஒன்று அரசு வழங்ககூடிய செரியூட்டப்பட்ட அரிசியில் பல்வேறு ஊட்டசத்துகள் இருப்பதாவும், உயிர்மை வேளாண் பொருட்கள் விலை அதிகம் என்பதால் உடனடியாக முடிவெடுக்கமுடியாது என்று கூறினார்.மேலும், மதிய உணவில் தேங்காய் கீற்று வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.