ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இதுக்கு போய் ரூ.1.50 கோடி செலவா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

இதுக்கு போய் ரூ.1.50 கோடி செலவா? கனிமொழிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

காயத்ரி ரகுராம் கேள்வி

காயத்ரி ரகுராம் கேள்வி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியால் திறந்துவைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு ஆன செலவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள காயத்ரி ரகுராம், நகைக் கடன் ரத்து தொடர்பாகவும் விமர்சித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக எம்பி கனிமொழியால் நவீன பேருந்து நிழற்குடை திறந்துவைக்கப்பட்ட நிலையில், அதற்கான செலவு தொடர்பாக பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ள திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி,  தனது தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தொகுதிக்குட்பட்ட  பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது,  கட்டிடங்களை திறந்து வைப்பது என்று எப்போது பிஸியாக உள்ளார்.

  இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் (2019-2020) ஆம் ஆண்டு எம்பி நிதியை கொண்டு மில்லர்புரம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சில தினங்களுக்கு முன்பு  திறந்துவைத்தார்.  தூத்துக்குடி எம்.எல்.ஏ.வும்  அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

  இந்த பேருந்து நிழற்குடை  அமைக்க ரூ. 154 லட்சங்கள் (ரூ. 1.54 கோடி) செலவு செய்யப்பட்டதாக  கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு  தலைவரான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதையும் படிங்க: 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக: தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய விஜயகாந்த்!

  பேருந்து நிலையம் மற்றும் செலவு குறிப்பிடப்பட்ட கல்வெட்டு ஆகியவற்றின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “ இதற்கு போய் 1.54 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதா” என்று திமுக எம்.பி. கனிமொழியை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

  6000 கோடிக்கு அல்லேலூயா

  இதேபோல்,  திமுகவின் நகைக் கடன் அறிவிப்பையும் விமர்சித்துள்ள அவர், தங்க கடனை தள்ளுபடி செய்ய “தகுதி”மிகவும் அதிர்ஷ்டசாலி.. யார் அந்த “தகுதி”? அவர்கள் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரா?” என்று குறிப்பிட்டுள்ள அவர், விடியல் ஊழல் .. 6000 கோடி அல்லேலூயா.. ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Gayathri Raguramm, Kanimozhi, News On Instagram