முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் - அண்ணாமலை உத்தரவு

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் - அண்ணாமலை உத்தரவு

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கம் என அண்ணாமலை அறிவிப்பு.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் திருச்சி சூர்யா சிவாவை விமர்சித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தை அறிந்த தமிழக பாஜக தலைவர் காயத்ரி ரகுராமை 6 மாதங்கள் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Gayathri Raghuram, Gayathri Raguramm