முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “இசட் பிரிவு பாதுக்காப்புக்கு செலவிடும்போது, பேனா சிலைக்கு வரிப்பணத்தை பயன்படுத்துவது சரிதான்... “- காயத்ரி ரகுராம் ட்வீட்!

“இசட் பிரிவு பாதுக்காப்புக்கு செலவிடும்போது, பேனா சிலைக்கு வரிப்பணத்தை பயன்படுத்துவது சரிதான்... “- காயத்ரி ரகுராம் ட்வீட்!

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜகவிலிருந்து சமீபத்தில் விலகினார். தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து பதிவிடுவதாகவும் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கவுள்ளதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி, மே17 இயக்கம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், மக்களின் பல லட்சம் வரிப்பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மற்றொரு பதிவில், பேனாவுக்கு ஏன் பொதுமக்களின் பணம்? இந்த பேனா சிலை வித்தியாசமானதாகவும், ஒரு சுவாரஸ்யமான சுற்றுலா தலமாக இருந்தால், சுற்றுலா மூலம் அரசாங்கம் லாபம் ஈட்டினால் அதை அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாம். அது அரசாங்கத் திட்டத்தைப் பொறுத்தது என்று பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Gayathri Raghuram