முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''யாராலும் தடுக்க முடியாது.. நாட்டுக்காக உழைப்பேன்'' - சஸ்பெண்ட் குறித்து பதிலளித்த காயத்ரி ரகுராம்!

''யாராலும் தடுக்க முடியாது.. நாட்டுக்காக உழைப்பேன்'' - சஸ்பெண்ட் குறித்து பதிலளித்த காயத்ரி ரகுராம்!

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

என் மீது அன்பு கொண்டவர்கள் என்னிடம் பேசி கொண்டுதான் இருப்பார்கள் - காயத்ரி ரகுராம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு காயத்ரி ரகுராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை.

மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிக்கையை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், ’’நான் இதை ஏற்றுகொள்கிறேன். ஆனால் என் மீது அன்பு கொண்டவர்கள் என்னிடம் பேசி கொண்டுதான் இருப்பார்கள். அதை யாராலும் நிறுத்த முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், நாட்டுக்காக உழைப்பேன்’’ என பதிவிட்டுள்ளார்.

top videos

    முன்னதாக, பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் திருச்சி சூர்யா சிவாவுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    First published:

    Tags: Annamalai, BJP, Gayathri Raghuram, Gayathri Raguramm