ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''கனத்த இதயம்.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை'' - நள்ளிரவில் பரபர ட்வீட் செய்த காயத்ரி ரகுராம்.!

''கனத்த இதயம்.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை'' - நள்ளிரவில் பரபர ட்வீட் செய்த காயத்ரி ரகுராம்.!

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகக் கூறி ப் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு கடந்த நவம்பர் மாதம் நீக்கப்பட்டார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால் தன் மீது அன்பு கொண்டவர்கள் பேசி கொண்டுதான் இருப்பார்கள். அதை யாராலும் நிறுத்த முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், நாட்டுக்காக உழைப்பேன் எனத் தெரிவித்தார் காயத்ரி ரகுராம். அத்துடன், தமிழக பாஜக தலைமையை டிவிட்டர் மற்றும் ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் ” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி இந்தியாவின் தந்தை, அவர் எப்போதும் சிறப்புக்குரியவர், என்னுடைய விஸ்வகுரு அவர்தான் என்று குறிப்பிட்ட காயத்ரி ரகுராம், அமித் ஷா என்னுடைய சாணக்கிய குருவாக எப்போதும் இருப்பார் எனவும் கூறியுள்ளார். 8 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த அனைத்து பாஜகவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து வீடியோக்களையும் ஆடியோக்களையும் போலீஸில் கொடுக்க தயாராக இருக்கிறேன். மேலும் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Gayathri Raghuram