ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிடுவது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது என தெரிவித்தவர், “திமுகவை வீழ்த்த பலமான கட்சி தேவை என்ற நிலையில் அதிமுகவே பெரிய கட்சி என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் தேசிய பாஜக வளர்ந்திருக்கிறது என்று நீங்களும் உங்கள் வார்ரூமும் சொல்கிறீர்கள். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் தேசியக் பாஜக வளர்ந்திருக்கிறது என்று நீங்களும் உங்கள் வார்ரூமும் சொல்கிறீர்கள். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@Gayatri_Raguram) January 23, 2023
அதைத்தொடர்ந்து மற்றொரு பதிவில், “ஓப்டிக்ஸ் எல்லா நேரத்திலும் வேலை செய்யாது. சூசகமா இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி என்ன பயன்? நாடாளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளுக்கு பாஜக வெற்றி பெறும் எப்படி என்று வாக்குறுதி அளிப்பீர்கள்? அண்ணாமலை?” என்றும் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Gayathri, Annamalai