இஸ்லாமிய குடும்பத்திற்கு கல்வி உதவி வழங்கிய காயத்ரி ரகுராம்

இஸ்லாமிய குடும்பத்திற்கு கல்வி உதவி வழங்கிய காயத்ரி ரகுராம்

இஸ்லாமிய குடும்பத்தினருடன் காயத்ரி ரகுராம்

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்காக வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம் பள்ளப்பட்டியில் வறுமையில் வாடும் இஸ்லாமிய குடும்பத்தின் கல்வி உதவிக்காக ரூ.50000 வழங்கியுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருபுறம் மக்களை சந்தித்து வாக்கு வேட்டை நடத்தி வரும் நிலையில் திரைபிரபலங்கள் பலரும் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  நடிகர் ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி உள்ளிட்டோர் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல் நடிகை விந்தியா, வையாபுரி, போண்டா மணி உள்ளிட்டோரும் அதிமுக பாஜக கூட்டணிக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். திரையில் பார்த்து ரசித்த பிரபலங்கள் நேரில் வருவதால் கொரோனா காலம் என்று கூட பாராமல் அவர்களைப் பார்க்க மக்கள் கூட்டமும் கூடி வருகிறது.

  இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற காயத்ரி ரகுராம் மக்களுடனும் வேட்பாளருடனும் இணைந்து நடனமாடிய வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.  மேலும் காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பள்ளபட்டியில் வறுமையில் வாடும் இஸ்லாமிய குடும்பம் ஒன்று அவரைச் சந்தித்துள்ளது. கணவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வருமானமின்றி குடும்பம் வறுமையில் வாடி வருவதாகவும் அக்குடும்பத்தார் காயத்ரி ரகுராமிடம் தெரிவித்துள்ளனர்.

  அடுத்த நாளே அந்தக் குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளின் கல்விக்காக ரூ.50000 கொடுத்து உதவியுள்ளார் காயத்ரி ரகுராம். அவரது இந்த உதவி அக்குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  தேர்தலுக்காக வாக்கு கேட்டு மட்டுமே திரைபிரபலங்கள் பலரும் மக்களை சந்தித்து வரும் நிலையில் ஒரு குடும்பத்திற்கு தன்னால் முடிந்த உதவி செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் காயத்ரி ரகுராம்.
  Published by:Sheik Hanifah
  First published: